9/10/2012

தளிர் தாலாட்டு


அரும்புத் தாலினது
ஓராட்டு இது
அப்பனை உறங்கச் செய்ய
வளைய வந்த தாலாட்டு இது!

யாரிராரோ
ஆரிரரோ
பாப்பாக் குட்டிக்கு
ஆரிரரோ...
அப்பா..க் குட்டி
எந்திரிச்சு தூங்க வெக்கறேன்...
ஆராராரிரோ
செல்லங் குட்டி
ம்... ம்...
யாரிரரோ
ஆரிரரோ
பாப்பாக் குட்டிக்கு
ஆரிரரோ
அப்பாக் குட்டீ
அப்பா அம்மா குட்டிக்கு
ஆரிரரோ
செல்லங்குட்டீ
ஆரரிரோ
அப்பாக்குட்டீ...
ஆரரரோ....
........
.......
உறங்கச் செய்து விட்டு
கனவினில் வந்து
மிரட்டுகிறாய்
அப்பன் மீது
யானைச் சவாரி
போக வேண்டுமென!!

வா போகலாம்
வாழ்வுச் சோலையில்
தேன்சிட்டும் மலரும்
பூக்காடுகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தளிர் மரங்களும்
அரும்புக் கொடிகளும்
காணப் போகலாம் நாம்!!

2 comments:

naanjil said...

அருமை தம்பி. யாரது குரல்? யாழினிது என்ற குறளின் நினைவு.

பழமைபேசி said...

என் மகள்தானுங்க அண்ணே!!